“எங்களை கைவிட்டுட்டியேப்பா…” போட்டி தேர்வுக்கு படித்த பட்டதாரி… மொத்தமாக நொறுங்கிய கனவுகள்… காதலியுடன் தகராறு ஏற்பட்டதால் விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on ஆடி 30, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டம் சோடவரத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் லக்கராஜு பிரசாந்த், பி.டெக் முடித்துவிட்டு உயர்கல்விக்கான போட்டித் தேர்வுக்குத் தயாராகி வந்தார். கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் இவரது பெற்றோர், மகன் படித்துப் பெரிய நிலைக்கு வந்து தங்களுக்குத் தூணாக நிற்பான் என்று பெரிதும் நம்பியிருந்தனர். இந்நிலையில்தான், பிரசாந்திற்கும் அவரது காதலிக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை உருவாகியுள்ளது.

இந்த மோதலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பிரசாந்த், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தாங்கள் ஆசையாக வளர்த்த மகன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். காதல் சண்டையால் அவசரப்பட்டு எடுத்த இந்தத் தவறான முடிவு, ஒரு ஏழை குடும்பத்தின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாகச் சிதைத்துள்ளது.