“இனிமே நாம எதுக்கு உயிரோட இருக்கணும்”… குழந்தைக்கு தீராத நோய், கழுத்தை நெறித்த கடன் தொல்லை… மனைவி, 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை…!

By Nanthini on கார்த்திகை 24, 2025

Spread the love

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள பர்தாகி என்ற கிராமத்தை சேர்ந்த வீரேந்திர மஞ்சி(30) என்பவருடைய மனைவி ஆர்த்தி குமாரி (26). இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு மகளும் இரண்டு வயதில் ஒரு மகனும் இருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் வீரேந்திர மஞ்சி, தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தூங்கினார். அவருடைய வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளும் உயிரிழந்து கிடந்தனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் நான்கு பேரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர்களது மகளுக்கு நீண்ட காலமாக தீராத நோய் இருந்ததால் சிகிச்சைக்கு அடிக்கடி பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் கடன் பிரச்சனையும் இருந்துள்ளது.

இது போன்ற குடும்ப சிக்கல்களால் கலந்த ஏழு மாதங்களாக ஆர்த்தி குமாரி தன்னுடைய குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் தன்னுடைய கணவர் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போதும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீரேந்திர மஞ்சி, தன்னுடைய மனைவியின் கழுத்தை நிறைத்து கொலை செய்துள்ளார். இதில் அவர் உயிரிழந்து விட்டதால் குழந்தைகளையும் கழுத்தை நிறைத்து கொலை செய்துவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்போது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசா தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.