அர்ஜென்டினாவில் இளைஞர் ஒருவர் நான் உயிருடன் இருக்கிறேன் என்று கூறி இறுதி சடங்கிற்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்கா நாடான அர்ஜென்டினாவில் மது போதையில் இருந்த தனது 22 வயது மகன் காணாமல் போனதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் கரும்பு லாரி மோதி உடல் சிதைந்து உயிரிழந்து கிடந்த செய்தியும் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அவருடைய உடமைகள் மற்றும் சில உடல் அம்சங்களை கண்டு அது தன்னுடைய மகன் என்று அந்த பெண் அடையாளம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் இறந்து விட்டதாக கூறிய இளைஞர் அங்கு வந்துள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்து அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து போனர். பிறகு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல நாட்களாக மதுபோதையில் இருந்ததாகவும் தான் இறந்து விட்டதாக கூறப்பட்டது தெரியாது என்றோம் அந்த இளைஞர் கூறியுள்ளார். பிறகு சவப்பெட்டியில் இருப்பது யார் என்று விசாரித்து உரியவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…