உயிரிழந்த கணவன்… வட்டிக்கு விட்ட பெண்… மகளோடு சேர்ந்து பட்ட பகலில் கழுத்தறுத்துக் கொன்ற கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!

Spread the love

கிருஷ்ணகிரி அருகே தனியாக இருந்த தாய் மற்றும் மகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த எல்லையம்மாள் (50) கணவர் இறந்துவிட்ட நிலையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இவருடைய மகன் பெரியசாமி (16) பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

சுசிதா(13), சுசிகா(13) என்ற இரட்டை மகள்கள். இதில் சுசிகா தற்போது ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே காலாண்டு தேர்வு முடிந்த நிலையில் மதியம் சுசிதா வீட்டுக்கு சென்றுள்ளார். தாய் மற்றும் மகள் தனியாக இருந்த நிலையில் எல்லையம்மாள் வீட்டுக்கு அவருடைய தம்பி மனைவி சரோஜா சென்றுள்ளார். அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சோபாவில் எல்லையம்மாள் சடலமாக கிடந்தார். அவருக்கு அருகிலேயே சுஜிதா தரையில் உயிரிழந்து கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவுக்காரர் கத்தி கூச்சலிட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஓடி வந்தனர். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணத்தால் நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

6 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

6 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

7 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

7 மணத்தியாலங்கள் ago