மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மால்ஷேஜ் காட் பகுதியில், பிக்கப் வேன் ஒன்று ஆபத்தான முறையில் கட்டுப்பாடின்றி அங்கும் இங்குமாக அலைபாய்ந்து அதிவேகமாகச் சென்றுள்ளது. இதைக் கண்ட பின்னால் வந்த காரின் கேமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன. குறுகிய சாலையில் வேகமாகச் சென்ற அந்த வேன், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதுவது போலச் சென்று நூலிழையில் விபத்தைத் தவிர்த்துள்ளது. மேலும், வளைவுகளில் தவறான பாதையில் சென்று எதிரே வந்த வாகனங்களையும் அச்சுறுத்தும் வகையில் இயக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள், அந்த வேனை சினிமா பாணியில் துரத்திச் சென்று வழியை மறித்து நிறுத்தினர். பின்னர் வேன் ஓட்டுநரின் வாகன சாவியை பிடுங்கிய அவர்கள், அவரைத் தாக்கி தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நல்வாய்ப்பாக இந்த ஆபத்தான சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…