வேலை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ் ஏட்டு… “முகம், கையில் பிளேடால் கீறி…” வாலிபரின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2025

Spread the love

விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் அஜித் குமார். நேற்று முன்தினம் அஜித் குமார் விழுப்புரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்த நிலையில் காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ சண்முகம், ஏட்டு இளஞ்செழியன் ஆகியோர் அஜித்குமாரை மடக்கி பிடித்தனர். அவர் போதையில் வாகனம் ஓட்டியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவரது இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சிறிது நேரம் கழித்து ரயில் நிலையம் அருகே ஏட்டு இளஞ்செழியன் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அஜித்குமார் அங்கு வந்து இளஞ்செழியனின் முகம் மற்றும் கையில் பிளேடால் கீறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

   

இதனால் காயமடைந்த இளஞ்செழியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.