தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்தும் பேசி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக போட்டி என்ற காலம் போய் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 2026 தேர்தலில் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது மனைவியின் சொந்த ஊர் என்பதால் கோவையில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 2024 தேர்தலில் கோவையில் களமிறங்கிய அவர், கோவை வடக்கில் 71,174 வாக்குகளை பெற்றிருந்தார். அதிமுக 28,998 வாக்குகளும், திமுக 80,963 வாசுகளும் பெற்று இருந்த நிலையில் தற்போது அதிமுகவுடன் கூட்டணி இருப்பதால் வெற்றி உறுதி என பாஜகவினர் கருதுகின்றனர்.
