“நீ குண்டா இருக்க… உன்னால ஒரு குழந்தை பெத்துக்க முடியல”… கணவன் கூறிய அந்த ஒரு வார்த்தை… அடுத்த நொடியே மனைவி… உச்சக்கட்ட கொடூர சம்பவம்..!

By SATHISH R on ஆடி 2, 2026

Spread the love

பெங்களூருவில், உடல் பருமன் காரணமாக உன்னால் குழந்தை பெற முடியாது என்று கூறி, கணவன் மற்றும் அவனது குடும்பத்தினரால் செவிலியர் ஒருவர் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தார்வாடு மாவட்டத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரரான பசவராஜ் என்பவருக்கும், பிரியங்கா என்ற செவிலியருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே, பசவராஜ் தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணையாக தங்கம் மற்றும் பணம் கேட்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வற்புறுத்தத் தொடங்கியுள்ளார்.

   

வரதட்சணைக் கொடுமையோடு நிறுத்தாமல், பிரியங்காவின் உடல் தோற்றத்தைக் குறித்தும் அவரது கணவர் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்துள்ளார். “நீ மிகவும் குண்டாக இருக்கிறாய், உன்னை எனக்குப் பிடிக்கவில்லை; உன்னால் ஒருபோதும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது” என்று கூறி பசவராஜ் நாளுக்கு நாள் சித்ரவதையை அதிகமாக்கியுள்ளார். அவனது குடும்பத்தினரும் இதற்கு உடந்தையாக இருந்து பிரியங்காவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த பசவராஜ் பிரியங்காவை கடுமையாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

   

பிரியங்காவின் மரணத்தில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், அவர் திருமணத்திற்குப் பிறகு இரண்டு முறை இயற்கையாகவே கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், கணவன் பசவராஜ் தொடர்ந்து அவரை கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதன் காரணமாகவே அந்த இரண்டு முறையும் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. தனது சொந்தக் கொடுமையால் கரு கலைந்ததை மறைத்துவிட்டு, பிரியங்காவின் உடல் எடையால் தான் குழந்தை பிறக்கவில்லை என்று பழிசுமத்தி, அந்த அப்பாவிப் பெண்ணை பசவராஜ் திட்டமிட்டுத் தீர்த்துக் கட்டியுள்ளார் என்பது அவரது குடும்பத்தினர் மூலம் தெரியவந்துள்ளது.

 

இந்தக் கொடூரக் கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே பிரியங்காவின் பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே அவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, போலீஸார் விரைந்து வந்து வழக்குப் பதிவு செய்தனர். பிரியங்காவைக் கொலை செய்த கணவன் பசவராஜ் மற்றும் அவனது குடும்பத்தைச் சேர்ந்த ரேணவ்வா, சுபாஷ், சித்தரமேஷ் ஆகிய நால்வரையும் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கொலை வழக்கு மற்றும் வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.