2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி நிகழப்போகும் செவ்வாய் மற்றும் சனி கிரகங்களின் சேர்க்கை ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மீன ராசியில் இந்த இரண்டு வலிமையான கிரகங்கள் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு ‘ராஜயோக’ பலன்கள் கிடைக்கவுள்ளன. இது குறிப்பாக ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை வெகுவாக உயரும் என்றும், கடின உழைப்பிற்கான தகுந்த பலன்களும் சொத்து சேர்க்கையும் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மிதுன மற்றும் துலாம் ராசியினருக்கும் இந்த கிரகப் பெயர்ச்சி சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். மிதுன ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும் புகழையும் அடைவார்கள்; நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிட்டும்.
இந்நிலையில் துலாம் ராசியினரைப் பொறுத்தவரை, ஆறாம் வீட்டில் நிகழும் இந்த சேர்க்கையால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், நீண்ட நாள் கடன்கள் தீரவும், எதிரிகளை வெல்லவும் வாய்ப்புகள் அமையும். இருப்பினும், பாதுகாப்பு கருதி மற்றவர்களின் வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
