வயசானாலும் உங்க அழகும் கவர்ச்சியும் இன்னும் உங்களை விட்டு போகல… நடிகை ரம்யா கிருஷ்ணன் அசத்தலான மாஸ் புகைப்படங்கள் இதோ…

By Begam on ஐப்பசி 8, 2022

Spread the love

நடிகை ரம்யா கிருஷ்ணன் பச்சை நிற சல்வார் ஒன்று அணிந்து மிகவும் அழகாக இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அழியாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.  சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பாகுபலி திரைப்படத்தில்  ராஜமாதா சிவகாமி தேவியாக தோன்றி மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

   

   

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறி நடிப்பதில் ரம்யா கிருஷ்ணன் நிகர் வேறு யாரும் இல்லை. இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்ன திரையில் சீரியல்களிலும், பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இதுவரை 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

இதை தொடர்ந்து அவர் ரஜினி கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் இவர் நடித்துக் கொண்டு வருகிறார். இதைத்தொடர்ந்து ‘லிகர்’  படத்தில் ஹீரோவின் தாயாக வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

52 வயதாகும் இவர் இளம் நடிகைகளுக்கு டஃப்  கொடுக்கும் வகையில் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது பச்சை நிற சல்வார் அணிந்து எடுத்துள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….