நடிகர் நரேன் தனது மனைவி மற்றும் மகள் உடன் இணைந்து எடுத்து அழகான குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் நரேன். இதனை தொடர்ந்து அவர் பள்ளிக்கூடம், அஞ்சாதே, தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் வெளியான உலகநாயகன் கமலஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 2007 இல் மஞ்சு என்ற தொலைக்காட்சி தொகுப்பாளினியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தன்மியா என்று ஒரு மகள் உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் நரேன். தற்பொழுது நரேன் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் அழகான குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காங்களா?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…