“நீதான் வேணும், என் பொண்டாட்டிய விட்டுட்டு உன் கூட வந்துடுறேன்”… மனைவியின் தோழி மீது வந்த ஆசை… வாலிபர் செய்த உச்சகட்ட கொடூர செயல்…!

By Nanthini on மார்கழி 16, 2025

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் தனது மனைவியுடன் கோவை சோமனூர் அருகே உள்ள பகுதியில் தங்கிய தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்து வந்தார். மனைவியும் அங்கு வேலை செய்த ஒரு இளம் பெண்ணும் தோழியாக பழகி வந்த நிலையில் ஜெகனுக்கு மனைவி மூலம் அந்த இளம் பெண் பழக்கமாகியுள்ளார். பிறகு ஜெகன் அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி போனில் பேசி வந்த நிலையில் இதனால் கணவன் மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்த நாளன்று ஜெகனுக்கு அந்த இளம் பெண் கைகடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார். தொடர்ந்து இளம் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட ஜெகன் அவருடைய வீட்டுக்குச் சென்று அந்த இளம் பெண்ணிடம் உன்னை விரும்புவதாகவும், என் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னோட திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். அதற்கு இளம்பெண் சம்மதிக்காமல் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு எதுவும் தெரியாதது போல இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டார்.

   

இளம்பெண்ணின் தங்கை வீட்டுக்கு வந்து பார்த்தபோது அக்கா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவி இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் இளம் பெண் கழுத்து நெறிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஜெகன் அந்த வீட்டுக்கு வந்து சென்றது உறுதி செய்யப்பட்டது. பிறகு அவரை கைது செய்து விசாரணை செய்ததில் இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜன் குற்றம் சாட்டப்பட்ட ஜெகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.