திருமணத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, வருங்கால மனைவி தனது முன்னாள் காதலனைச் சந்திக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஆன்லைனில் பலத்த விவாதங்களையும் விமர்சனங்களையும் தூண்டிவிட்டுள்ளது. அந்த வைரல் வீடியோவில், மணமகள் உடையில் இருக்கும் ஒரு பெண், தனது தோழியுடன் ஒரு காருக்குள் பதட்டத்துடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். அவளுடைய தோழி கேமராவில், “திருமணத்திற்கு முன்பு, முன்னாள் காதலனைப் பார்ப்பதுதான் கடைசி முறை” என்று விளக்குகிறார்.
View this post on Instagram
இந்தச் சந்திப்பு, அந்தப் பெண் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு முன்பு, கடந்த கால உறவுக்கு ஒரு உணர்ச்சிகரமான முடிவை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ ஆன்லைன் பயனர்களிடையே, திருமணத்திற்கு முந்தைய விசுவாசம், உறவுகளின் எல்லைகள் மற்றும் இத்தகைய சந்திப்புகளின் தேவை குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
