வேலை தேடும் பெண்களே உஷார்…! 30 இளம்பெண்களுடன் உல்லாசம்… பல லட்சம் சுருட்டல்… போலீசிடம் சிக்கிய போலி அதிகாரி…!!

Spread the love

கர்நாடக மாநிலம் விஜயாப்புராவைச் சேர்ந்த ஈரண்ணா படிகர் என்ற நபர், இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தன்னை ஒரு இஸ்ரோ ஊழியராகச் சித்தரித்து போலி கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயை இணையவழியாகப் பெற்று மோசடி செய்துள்ளார். மேலும், சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இளம் பெண்களை இதே வாக்குறுதியைக் கூறி ஏமாற்றியது மட்டுமின்றி, அவர்களைத் தன் ஆசைக்கு இணங்க வைத்து பாலியல் ரீதியாகவும் சுரண்டலுக்கு ஆளாக்கியுள்ளார்.

பல மாதங்களாகியும் வேலை கிடைக்காததால் சந்தேகம் அடைந்தவர்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு வற்புறுத்தியபோது, அவர் தனது சமூக வலைத்தளக் கணக்கை நீக்கிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த கதக் காவல்துறையினர் அவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தான் வாங்கிய தனிப்பட்ட கடன்களை அடைப்பதற்காகவே இந்த நூதன மோசடியில் அவர் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது. மேலும், அவரது அலைபேசியில் பல பெண்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் இருந்ததையும், அவரது வீட்டில் ஏராளமான ஆணுறைகள் இருந்ததையும் கண்டறிந்து பறிமுதல் செய்த போலீசார், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gayathri

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

3 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

3 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

3 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

4 மணத்தியாலங்கள் ago