“ஐயோ, அம்மா இனிமே என்னால தாங்க முடியாது”…. அடிக்கடி தீராத வயிற்று வலி, பேய் பிடித்து அலறிய இளம்பெண்… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 30, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் அருகே உள்ள புராடுகுண்டே கிராமத்தை சேர்ந்த அஞ்சனப்பா என்பவருடைய மனைவி மதுஸ்ரீ. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் சாரதா (18). இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு அஞ்சனப்பா இறந்து விட்டார். இதனால் மது ஸ்ரீ தன்னுடைய பிள்ளைகளுடன் அருகே உள்ள கிராமத்திற்கு குடியேறினார். இந்நிலையில் சாரதா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வலி குணமாகவில்லை என தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் சாரதா அடிக்கடி பேய் பிடித்தது போல கத்துவதும் கோபப்படுவதுமாக இருந்துள்ளார். இதனால் அவரை மது ஸ்ரீ கோவிலுக்கும் அழைத்துச் சென்று வந்துள்ளார். இதனிடையே தீராத வயிற்று வலியால் விரக்தியில் இருந்த சாரதா என்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.