எனக்கு கார்ப்பரேட் கம்பெனி வேணாம்… அம்மா கூட இருக்கறதுதான் பெருசு… வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆட்டோ ஓட்டும் இளம் பெண்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

By Swetha on ஐப்பசி 1, 2026

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அதிக சம்பளம் தந்த மதிப்புமிக்க ஐ.டி. வேலையைத் துறந்துவிட்டு ஆட்டோ ஓட்டி வரும் நெகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. தந்தையின் மறைவுக்குப் பிறகு, தனது தாயார் வீட்டில் தனியாகவும் தனிமையிலும் இருப்பதை எண்ணி அவர் மிகவும் கவலைப்பட்டுள்ளார். தாயை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் செல்வது மனதிற்கு மிகுந்த கடினமாக இருந்ததாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.

தாயை அருகிலிருந்து அன்போடு பராமரிக்க வேண்டும் என்ற ஒரே நோத்திற்காக, அவர் தனது கார்ப்பரேட் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலைத் தேர்வு செய்துள்ளார். இந்த முடிவின் மூலம், அவரால் தினமும் தனது தாயாருடன் போதுமான நேரத்தைச் செலவிட முடிகிறது. தாயின் தனிமையைப் போக்கி, அவருடைய பராமரிப்பிற்கு முன்னுரிமை அளித்த இளம்பெண்ணின் இந்தச் செயல் அனைவரிடமும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

மேலும், இந்த ஆட்டோ ஓட்டும் தொழில் கார்ப்பரேட் வேலையை விடத் தனக்காக மிகுந்த மனநிறைவைத் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்தபோது சம்பாதித்ததை விட, தற்போது ஆட்டோ ஓட்டுவதன் மூலம் அதிகமாகச் சம்பாதிக்க முடிவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தாயின் மீது கொண்ட அன்பிற்காகத் தனது உயர் வேலையைத் துறந்த இந்த இளம்பெண்ணின் துணிச்சலான முடிவு பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.