மனுஷத்தன்மையே இல்லையா…? “இறப்பு வீட்டில் குல்ஃபி சாப்பிட்ட இளம்பெண்…” சமூக வலைதளங்களில் புயலை கிளப்பிய சர்ச்சை புகைப்படம்…!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2026

Spread the love

இறப்பு ஊர்வலம் ஒன்று வீதியில் கடந்து சென்று கொண்டிருக்கும் போது, அங்கே இருக்கும் இளம்பெண் ஒருவர் எவ்வித கவலையும் உணர்ச்சியும் இன்றி மிகவும் ஜாலியாகக் குல்ஃபி ஐஸ்கிரீம் சாப்பிடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

ஒரு குடும்பத்தில் நபர் ஒருவர் உயிரிழந்து, அந்த முழு குடும்பமும் சோகத்தில் மூழ்கி ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கும் வேளையில், சிறிதும் கவலையின்றி இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண் ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வது சமூகத்தின் இரக்கமற்ற மனநிலையைக் காட்டுவதாக எக்ஸ் (ட்விட்டர்) பயனர் உஸ்மா பர்வீன் என்பவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி நெட்டிசன்கள் மத்தியில் காரசார விவாதத்தை உருவாக்கியுள்ளது.

   

சிலர் இது டிஜிட்டல் உலகம் மற்றும் செல்போன் போதையினால் இளம் தலைமுறையினரிடம் ஏற்பட்டுள்ள ஆபத்தான மனமாற்றம் எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலர் இது ஏதேனும் மனநலப் பாதிப்பால் நடந்திருக்கலாம் என்றும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சோகமான சூழலிலும் மனிதநேயமின்றி நடந்துகொள்ளும் இத்தகைய சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.