2023-இல் திருமணமான நிலையில், கணவன் சம்பாதிக்க குவைத் சென்றதால், ஊரில் தனிமையில் இருந்த மனைவி வேறொரு இளைஞருடன் பழகி தீவிர காதலில் விழுந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக இரவும் பகலும் தொடர்ந்த இந்த கள்ளக்காதல், கணவன் ஊருக்குத் திரும்பியதும் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தை மனைவிக்கு ஏற்படுத்தியது.
பயத்தின் உச்சத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து இரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை மனைவியே கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர், வீட்டிற்குள் திருடர்கள் புகுந்து நகைகளைக் கொள்ளையடித்து கணவனைக் கொன்றுவிட்டதாகப் நாடகமாடி, காவல் துறைக்கே சவால் விடும் வகையில் அழுகை காட்சியையும் அரங்கேற்றினார்.
வழக்கை விசாரிக்க வந்த காவல் துறையினருக்கு மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அவரது தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது, கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீட்டிய சதித்திட்டம் அம்பலமானது. கதறி அழுது நாடகமாடிய பெண்ணை காவல் துறையினர் கைது செய்து கூட்டிச் சென்றனர்.
