குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பாபுநகர் பகுதியில், திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய 24 வயது இளம்பெண்ணுக்கு அவரது லிவ்-இன் பார்ட்னர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்ததால், மனமுடைந்த அப்பெண் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தக்ஷா பர்மார், கடந்த 2021-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலமாக மயூர் பர்மார் என்பவருடன் பழகத் தொடங்கியுள்ளார்.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் லிவ்-இன் முறையில் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்குக் கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘ஆனந்த்’ என்ற ஆண் குழந்தை பிறந்த நிலையில், அகமதாபாத்தின் பாபுநகருக்குக் குடிபெயர்ந்த தக்ஷா, தன்னை முறைப்படித் திருமணம் செய்து கொள்ளுமாறு மயூரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் மயூர் பல்வேறு காரணங்களைக் கூறித் திருமணத்தைத் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்ததுடன், அவரும் அவரது பெற்றோர் பிரவீன், மஞ்சு மற்றும் தம்பி விஷால் ஆகியோரும் சேர்ந்து தக்ஷாவைத் தினமும் வசைபாடியும், தாக்கியும் கொடுமைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, “மயூருக்கு உன்னைப் பிடிக்கவில்லை, வீட்டை விட்டு வெளியே போ அல்லது செத்துப் போ” என்று அவர்கள் தொடர்ந்து குத்திக் காட்டிப் பேசியதால் தக்ஷா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். கடந்த நவம்பர் 15-ஆம் தேதி காலையில்கூடத் தனது தாய் நந்தாபென் ரத்தோடைத் தொடர்பு கொண்ட தக்ஷா, வீட்டில் நடக்கும் கொடுமைகளைக் கூறி அழுதுள்ளார்.
மறுநாள் நேரில் வந்து பேசுவதாகத் தாய் ஆறுதல் கூறியிருந்த நிலையில், அன்றைய தினம் இரவு 9 மணியளவில் மயூர் போன் செய்து தக்ஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். தாயாரின் புகாரின் பேரில் பாபுநகர் காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து மயூர் பர்மார், அவரது தாய், தந்தை மற்றும் தம்பி ஆகிய நான்கு பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ள நிலையில், தாயை இழந்த இரண்டரை வயதுக் குழந்தை ஆனந்த் தற்போது தனது பாட்டியின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…
அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…
பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…