புற்றுநோயாளிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் குட் நியூஸ்…. இந்த 18 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. ரூ.2.77 கோடி மெகா திட்டம் தொடக்கம்….!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகளுக்கான ‘ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டம்’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி போன்ற தீவிர சிகிச்சைகளை மேற்கொள்ளும் நோயாளிகளுக்குக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவது வழக்கம். இதனால் அவர்களின் உடல் வலிமை குறைந்து, சிகிச்சைகள் முழுமையாகப் பலனளிக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதனைத் தடுத்து, நோயாளிகள் விரைவாகக் குணமடைவதை உறுதி செய்யவே தமிழக சுகாதாரத் துறை மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகத் தங்கிப் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்குத் தினமும் 150 கிராம் அளவில் புரோட்டீன் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த சிறப்பு ஊட்டச்சத்து பவுடர் வழங்கப்பட உள்ளது. ஒரு பாக்கெட் ரூ.700 மதிப்புடையது. மருத்துவமனையில் சுமார் 45 நாட்கள் தங்கிச் சிகிச்சை பெறும் ஒரு நோயாளிக்கு, மொத்தம் 6 பாக்கெட்டுகள் வீதம் ரூ.4,200 மதிப்பிலான ஊட்டச்சத்து பவுடர் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

கடந்த ஆண்டில் மட்டும் தமிழக அரசு மருத்துவமனைகளில் சுமார் 30,000 புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், அவர்களில் சுமார் 60 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 2027 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்திற்கு 6,600 நோயாளிகள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.2.77 கோடி (ரூ.2,77,20,000) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான நிதி மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்ற பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

முதற்கட்டமாக இத்திட்டம் தமிழகம் முழுவதும் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் 18 முக்கிய அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை, ஸ்டான்லி, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, திருநெல்வேலி, சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த ஊட்டச்சத்து பவுடர் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழக அரசின் இந்த மனிதநேயமிக்க நடவடிக்கை, ஏழை மற்றும் எளிய பின்னணியிலிருந்து வரும் புற்றுநோயாளிகள் சிகிச்சையின் போது உடல் வலிமையைத் தக்கவைத்துக் கொண்டு விரைவில் குணமடையப் பேருதவியாக அமையும்.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

“அவர் எனக்கு தாய்க்கு மேலானவர்…” மாமியார் சிதைக்கு விறகு அடுக்கிய மருமகன்… சடங்கு முடிந்த சில நிமிடங்களில் அரங்கேறிய கோர சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…

5 மணத்தியாலங்கள் ago

தந்தையிடம் வாங்கிய பணம்…! ஒரு குடும்பத்தையே தீர்த்து கட்டி வாலிபர் செய்த கொடூரம்… ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…

5 மணத்தியாலங்கள் ago

தொடரும் தேடுதல் வேட்டை!… “அப்பா எங்களை விட்டுடுங்க”… மகன்களை நீரில் வீசிய தந்தை… விவசாயிகள் மீது கல்வீச்சு… அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…

5 மணத்தியாலங்கள் ago

சீச்சீ… என்ன கொடுமை இது?… பள்ளி மாணவருடன் தகாத உறவு வைத்திருந்த பெண் ஆசிரியர்… செல்போனில் சிக்கிய ஆதாரங்கள்… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…

5 மணத்தியாலங்கள் ago

நகை கடையில் பயங்கரம்…! திடீரென புகுந்த கும்பல்… ஊழியரை துப்பாக்கியால் தாக்கி நகை, பணம் கொள்ளை… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…

5 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… என்ன நீயெல்லாம் ஜென்மம்?… 80 வயது பாட்டியைக் கூட விட்டு வைக்காத கொடூரம்… CCTV- யில் சிக்கிய மர்ம நபர் யார்?… நெல்லையில் போலீசார் தீவிர வேட்டை…!

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…

5 மணத்தியாலங்கள் ago