அட கடவுளே… 24 மணி நேரம் சேற்றில் போராட்டம்… நேபாள வெள்ளத்தில் அதிசயமாக மீட்கப்பட்ட இளம்பெண்… பெற்றோரை இழந்து தவிக்கும் சோகம்…!

By Swetha on புரட்டாதி 4, 2026

Spread the love

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில், 25 வயது இளம்பெண் ஒருவர் பெருவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு வெகுதூரம் கொண்டு செல்லப்பட்டார். சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல் மாயமாகியிருந்தார்.

இந்தச் சூழலில், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர் அவரை உயிருடன் கண்டறிந்து, சேற்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலும் மிகுந்த சிரத்தையுடன் பாதுகாப்பாக மீட்டனர்.

   

https://twitter.com/Ayesha786Majid/status/2095173493361197501/video/2

   

வெள்ளத்தில் இருந்து அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிரோடு மீட்கப்பட்ட போதிலும், இந்த இயற்கை பேரிடரில் அவரது பெற்றோர் இருவரும் உயிரிழந்துவிட்டதால், அவளது பெற்றோரை இழந்து அநாதையாக நிற்கும் சோகம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.