உத்தரப்பிரதேசத்தில் பக்கோடா வாங்கச் சென்ற கணவனைத் தவிக்கவிட்டு, பேருந்து நிலையத்திலிருந்து புதுப்பெண் மர்மமான முறையில் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த பிரீதம் சிங் என்பவருக்கும், 18 வயது இளம்பெண் ரிம்ஜிம் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், ஹோலி பண்டிகைக்காகத் தாய் வீட்டிற்குச் சென்றிருந்த மனைவியை அழைத்துக்கொண்டு மார்ச் 9 அன்று பிரீதம் சிங் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். மொராதாபாத் மாவட்டத்தின் பிலாரி பேருந்து நிலையத்தில் அடுத்த பேருந்திற்காக அவர்கள் காத்திருந்தபோது, ரிம்ஜிம் தனக்குப் பசிப்பதாகக் கூறி சூடாக பக்கோடா வாங்கி வருமாறு கணவரிடம் கேட்டுள்ளார்.
மேலும் மனைவியின் விருப்பத்திற்காக அருகில் இருந்த கடைக்கு பிரீதம் சிங் சென்றார். ஆனால், சில நிமிடங்களிலேயே அவர் பக்கோடாவுடன் திரும்பி வந்தபோது, ரிம்ஜிம் அங்கிருந்து மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பேருந்து நிலையம் முழுவதும் தேடியும் மனைவியைக் கண்டுபிடிக்க முடியாததால், அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் தனது மனைவியின் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அவர் சென்றிருக்கலாம் எனப் பிரீதம் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிறிய பக்கோடா இடைவேளையில் புதுப்பெண் மாயமான இந்தச் சம்பவம் அப்பகுதியில் விவாதப் பொருளாகியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…