திமுக டீம் ரெடி… “42 இடங்கள் பார்சல்”… தொகுதி பங்கீட்டில் ஸ்டாலின் காட்டிய ‘மாஸ்’ வேகம்… ஆடிப்போன எதிர்க்கட்சிகள்..!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் திமுக தனது மெகா கூட்டணியை உறுதி செய்வதில் அதிவேகம் காட்டி வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இன்னும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்காமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தரப்பில் கடந்த மாதம் அமைக்கப்பட்ட தொகுதிப் பங்கீட்டுக் குழு, கூட்டணி கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி, பல இடங்களை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது.

தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக, மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக ஆகிய கட்சிகளுக்குத் தலா 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு 4 தொகுதிகளும் என மொத்தம் 42 தொகுதிகள் இதுவரை பங்கீடு செய்யப்பட்டுள்ளன.

கூட்டணியில் உள்ள மற்ற முக்கியக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் (விசிக), தேமுதிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவற்றுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, விசிகவுடன் ஏற்கனவே ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் புகழேந்தி போன்றோர் திமுகவிற்கு ஆதரவான பிரச்சாரத்தை அறிவித்துள்ளது கூட்டணிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இதுவரை 42 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 192 தொகுதிகளில் மற்ற சிறிய கட்சிகளுக்கான பங்கீடு போக, திமுக எத்தனை இடங்களில் நேரடியாகப் போட்டியிடும் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிக இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத் தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே திமுகவின் வியூகமாக உள்ளது. தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இந்த விறுவிறுப்பு, தமிழக தேர்தல் களம் முழுவீச்சில் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது.

Muthu Mani

Recent Posts

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

6 minutes ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

26 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

49 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

51 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

54 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

1 மணத்தியாலம் ago