ராயப்பேட்டையை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் நந்தனத்தில் உள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கணேஷ் ராம் என்பவருக்கும் இந்த பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில் இன்ஜினியரிங் பட்டதாரியான கணேஷ் ராம் சினிமா டைரக்டராக முயற்சி செய்து வருகின்றார். இவருடைய சொந்த ஊர் சேலம். நேற்று மாலை இளம் பெண் வேலை முடிந்ததும் காதலன் தங்கியுள்ள அறைக்கு வந்த நிலையில் இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் சிக்கன் கறி சமைத்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் இளம் பெண்ணுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் கழிவறைக்கு சென்ற போது கீழே விழுந்தார். இதில் நெற்றியில் பலத்த காயமடைந்த நிலையில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காதலன் கணேஷ் ராம் உடனே போலீசாருக்கும் இளம்பெண் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும் இளம்பெண் மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில் எப்படி அவர் இறந்தார் என்பது குறித்து வீட்டில் இருந்த காதலன் கணேஷ் ராமிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
