சென்னை ஆவடி அடுத்த கண்ணம்பாளையம் பாரதிநகரில் வசித்து வருபவர் சங்கர். தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். மூத்த மகள் சர்மிளா(19). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று ஷர்மிளா தூங்கி எழுந்த போது திடீரென்று உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சொரிந்து கொண்டே இருந்துள்ளார். சில நிமிடங்களில் அரிப்பு ஏற்பட்ட இடமெல்லாம் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வீட்டில் இருந்த மஞ்சள் எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டு குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது திடீரென்று அவருடைய வாயில் நுரை தள்ளி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவருடைய உடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்த முதல் கட்ட விசாரணையில் ஷர்மிளாவின் தந்தை ஷங்கருக்கும் இதேபோன்று விஷப்பூச்சி கடித்து அரிப்பு ஏற்பட்டு உடலில் வீக்கம் ஏற்பட்டதும் இதே போல ஷர்மிளாவையும் விஷப்பூச்சி ஏதாவது கடித்து உகந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்கள் மேலும் இவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் உயிரிழப்புக்கான காரணம் என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளார்கள்
