பிரபல நடிகர் பவன் சிங், சமீபத்தில் நடிகை அஞ்சலி போஜ்புரியுடன், ஓர் பட விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது நடிகை அஞ்சலி பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென அவரது இடுப்பில் கை வைத்துள்ளார் பவன் சிங். சிரித்தபடியே அஞ்சலி திரும்பி பார்த்தார், மீண்டும் பவன் சிங் அவர் இடுப்பை தொட்டுள்ளார். இதனால் பெரும் சங்கடம் அடைந்த அஞ்சலி, தன் முகத்தில் சிரிப்பை மட்டுமே வெளிப்படுத்தினார்.
லக்னோவில் “சாயா சேவா கரே” என்ற பாடலுக்கான விளம்பர நிகழ்ச்சியில், இந்த சம்பவம் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையவாசிகள் அவருக்கு எதிராக விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நடிகை அஞ்சலி போஜ்புரி, தான் திரையுலகில் இருந்து விடை பெறுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல கண்டனங்களை எதிர்கொண்ட பவன் சிங், தனது செயல் அஞ்சலியை பாதித்திருந்தால் மன்னித்து விடுமாறு தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
