ரூ.50 லட்சம் வரதட்சணை…!! கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கணவர்…. கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!

By Devi Ramu on ஆவணி 29, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில் ஷில்பா மீண்டும் கர்ப்பமானார். இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற போது ஷில்பாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 50 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.

திருமணமான சில நாட்கள் கழித்து ஐடி நிறுவன வேலையை ராஜினாமா செய்த பிரவீன் பாணிபூரி ஹோட்டல் தொழில் செய்து மேலும் வரதட்சணை வாங்கி வருமாறு மனைவியை சித்திரவதை செய்தார். இதற்கு பிரவீன் தாய் சாந்தா, தங்கை பிரியா ஆகியோரும் உடந்தையாக இருந்தனர் சிறிது நாட்கள் கழித்து சில்பா குடும்பத்தினர் 10 லட்ச ரூபாய் பணத்தை பிரவீனிடம் கொடுத்தனர்.

   

அதன்பிறகும் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலில் ஷில்பா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷில்பாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சாந்தா, பிரியா ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் பிரவீனை தேடி வருகின்றனர்.