2024 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 543 இடங்களில் 240 இடங்களை மட்டுமே வென்றது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு ஆதரவால் 293 இடங்களோடு மூன்றாவது முறையாக ஆட்சியை பாஜக பிடித்தது. அதே வேளையில் இந்தியா கூட்டணி 234 இடங்களை பிடித்தது. இந்த நிலையில் இந்தியா டுடே மற்றும் சி ஓட்டர் இணைந்து கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தேசிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தியது.
அதன்படி இன்றைய தேதியில் தேர்தலில் நடத்தினால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 324 இடங்களில் வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும் காங்கிரஸ் கூட்டணிக்கு 208 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
