“வாழ்ந்தாலும் செத்தாலும் உன் கூட தான்”… காதலன் இறந்த துக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்… சென்னையில் நடந்த சோக சம்பவம்…!

By Nanthini on ஆவணி 30, 2025

Spread the love

தென்னை திருவெற்றியூர் தியாகி சத்தியமூர்த்தி நகர் எட்டாவது தெருவில் வசித்து வந்த கணேசன் என்பவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் சரோஜினி தேவி (24) கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பீகாம் படித்துவிட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கல்லூரி படித்த சமயத்தில் வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24 ஆம் தேதி ஸ்டாலின் மருத்துவமனையில் காதலர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

இதனால் சரோஜினி தேவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் பெற்றோர் வியாசர்பாடி உள்ள சித்தி வீட்டில் அவரை தங்க வைத்திருந்தனர். இந்நிலையில் சரோஜினி தேவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் காதலன் இறந்த துக்கத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது