சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார் சத்திரத்தை சேர்ந்த அனுஷா (18) என்ற இளம் பெண்ணும் கண்ணன் தாங்கல் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் கண்ணன் (21) என்ற வாலிபரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இளம் பெண்ணும் இளைஞரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கண்ணனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதனால் சஞ்சயின் பெற்றோர் ஊராட்சி தலைவரிடம் இந்த விவகாரம் குறித்து பேசி உள்ளனர். பிறகு ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் கட்டப்பஞ்சாயத்து செய்து காதல் ஜோடியை பிரித்து வைத்தனர்.
இதனால் சஞ்சய் கண்ணன், அனுசியா உடனான பழக்கத்தை திடீரென்று நிறுத்தி உள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் மிகப்பெரிய பூதகரமாக வெடித்துள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…