“என்னையே பாக்குறீயா..?” கண்ணடித்த வாலிபரை.. நடுரோட்டிலேயே விரட்டி விரட்டி அடித்த இளம்பெண்… பாராட்டும் நெட்டிசன்கள்..!!

By Swetha on ஆனி 5, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் தனியாகச் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம் வாலிபர் ஒருவர் வம்பு இழுத்து, அநாகரிகமான முறையில் கண்ணடித்துள்ளார். இதனால் கடும் கோபமும் ஆவேசமும் அடைந்த அந்தப் பெண், சற்றும் பயப்படாமல் அந்த வாலிபரை நடுரோட்டிலேயே விரட்டி விரட்டித் தாக்கியுள்ளார். பொது மக்கள் முன்னிலையிலேயே அவரைப் புரட்டி எடுத்ததோடு மட்டுமல்லாமல், அடித்துக் கொண்டே இழுத்துச் சென்று அருகில் இருந்த காவல் நிலையத்திலும் ஒப்படைத்தார்.

பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களுக்குப் பயந்து ஒதுங்கிப் போகாமல், அந்த இளம்பெண் காட்டிய இந்த அதிரடித் துணிச்சல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்ய, அது தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது. தவறு செய்த வாலிபருக்குத் தகுந்த பாடம் புகட்டிய அந்தப் பெண்ணின் தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.