2026 ஆகஸ்ட் 21 அன்று பிரேசிலின் அகுவாஸ் லிண்டாஸ் டி கோயாஸ் நகரில், 24 வயதான எமிலியன் தமரா நூன்ஸ் கார்வால்கோ என்ற பெண் மீட்கப்பட்டார். தனது முன்னாள் கணவரான ஐல்டன் ரோட்ரிக்ஸ் மென்டெஸால் அவர் ஐந்து நாட்கள் பிணைக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார். இரண்டு குழந்தைகள் குறித்து பேசுவதற்காக முன்னாள் கணவரை சந்தித்த அவர், ஆகஸ்ட் 17 அன்று காணாமல் போனார்.
வாடகை வீடு ஒன்றில் படுக்கையில் கிடந்த அவரை, காவல்துறையினர் சங்கிலிகள், கயிறுகள் மற்றும் கைவிலங்குகள் கொண்டு கை, கால்கள் மற்றும் கழுத்தில் பிணைக்கப்பட்ட நிலையிலும், வாய் மூடப்பட்டும், மூச்சு விடுவதைத் தடுக்கும் முகமூடி அணிவிக்கப்பட்ட நிலையிலும் கண்டுபிடித்தனர். அவளுக்கு மயக்க மருந்துகளைக் கொடுத்து அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றதாக அந்த நபர் ஒப்புக்கொண்டார்.
https://twitter.com/RapidReport2025/status/2091204870351004099/video/1
மீட்கப்பட்ட அதே நாளன்று குற்றவாளி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆள் கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
