“வீடியோ எடுக்காமல் ஓடிவந்த பொதுமக்கள்…! சாதுரியமாக செயல்பட்டு சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மனிதநேயம்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 26, 2026

Spread the love

டெல்லி – மதுரா சாலையில் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எதிர்பாராதவிதமாகச் சாலையோரம் இருந்த திறந்தநிலை சாக்கடையில் தவறி விழுந்தான். இன்றைய காலத்தில் விபத்துகளைப் பார்த்தால் உடனடியாக செல்போனில் வீடியோ எடுப்பவர்களே அதிகம் உள்ள நிலையில், அங்கிருந்த மக்கள் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாகச் சாதுரியமாகச் செயல்பட்டு, சாக்கடையில் சிக்கிய சிறுவனைத் துரிதமாக வெளியே மீட்டு அவனது உயிரைக் காப்பாற்றினர்.

அதிகாரிகள் வரும் வரை காத்திருக்காமல், பொதுமக்கள் உடனடியாக ஒன்று சேர்ந்து சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய இந்தக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய அந்த நல்நெஞ்சம் கொண்ட மனிதநேயவாதிகளுக்கு இணையவாசிகள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.