சென்னையில் தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும், சமூக வலைதளப் பிரபலமாகவும் வலம் வந்த பிரியவதனா (எ) பிரியா (24) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊடக உலகிலும் அவரது ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்த அவர், நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டுப்புடவையில் மணப்பெண் போல் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ஆனால், அதற்கு மறுநாளே அவர் இப்படியொரு விபரீத முடிவை எடுத்திருப்பது பலரையும் உலுக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் துடிப்பான காணொளிகளால் ஆயிரக்கணக்கானோரை ஈர்த்து வந்த ஒரு இளம் பெண், வாழ்வின் தொடக்கத்திலேயே தற்கொலைத் தீயில் கருகியது சமூகத்தில் மனநல விழிப்புணர்வு மற்றும் தற்கொலைத் தடுப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை பலமாக உணர்த்தியுள்ளது.
