சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வாங்க் என்பவரின் மனைவி குளிர்வதாகக் கூறியதை அடுத்து, அன்போடு அவர் இறுக்கமாகக் கட்டியணைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எலும்புகள் முறியும் சத்தம் கேட்டுள்ளதுடன், சிறிது நேரத்தில் அந்தப் பெண் கடுமையான வலியால் துடித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு ஐந்து விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கணவரின் சாதாரண அரவணைப்பே விபரீதமாக மாறியதற்கான முக்கியக் காரணம், அப்பெண்ணுக்கு இருந்த ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு மெடையும் நோயாகும். முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களால், குறிப்பாக டயட் என்ற பெயரில் இரவு உணவைத் தவிர்ப்பதாலும், அவரது உடல் எடை நாற்பத்தைந்து முதல் ஐம்பது கிலோவாகக் குறைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் அத்தியாவசிய வைட்டமின் டி சத்து கிடைக்காமல் அவர் தப்பியுள்ளார். எப்போதும் வெயில் படாதவாறு முழு உடலையும் மூடிக்கொண்டு வாழ்ந்ததே அவரது எலும்புகள் பலவீனமடைய வழிவகுத்துள்ளது. இந்தத் தவறுதான் சாதாரணமான ஒரு அரவணைப்பைக் கூட எலும்பு முறிவுக்கு ஆளாக்கும் அளவிற்கு எலும்புகளை நலிவடையச் செய்துள்ளது.
இந்தச் சம்பவம் ஆரோக்கியமான உணவு மற்றும் முறையான சூரிய ஒளி உடல்நலத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறது. தற்போது மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள அப்பெண், மருந்து மாத்திரைகளுடன் உரிய ஓய்வெடுத்து வருகிறார். அன்பின் வெளிப்பாடு ஆபத்தாக மாறாமல் இருக்க, முறையான உடல் ஆரோக்கியமும் ஊட்டச்சத்துக்களும் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமானதாகும்.
