அசந்து தூங்கிய பெண்…! ஆபாசமாக போட்டோ…! நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த வாலிபருக்கு தர்ம அடி… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 7, 2026

Spread the love

திருநெல்வேலி பகுதியில் தனியாக வசித்து வரும் பெண்களை இலக்காகக் கொண்டு, நள்ளிரவு நேரங்களில் வீடுகளுக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து அவர்களை ஆபாசமாகச் படம்பிடிக்கும் கொடூரச் செயலில் பீர்முகமது (23) என்ற இளைஞர் ஈடுபட்டு வந்துள்ளார். பல நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த அக்கிரமச் செயலால் அப்பகுதி பெண்கள் பெரும் பீதியிலும் அச்சத்திலும் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கம் போல நள்ளிரவில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரைப் படம் பிடிக்க முயன்றபோது, அந்த இளைஞர் கையும் களவுமாகப் பிடிபட்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரைப் பிடித்துச் சரமாரியாகத் தர்மஅடி கொடுத்து நெல்லைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அந்த இளைஞரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.