”வந்து இருப்பது சேகர் பாபு-யா” … காரில் அமர்ந்தபடி பார்த்த சேகர்பாபு… 30 நிமிட அதிர்ச்சி சம்பவம்…. திருத்தணி அடிவாரத்தில் பரபரப்பு…!

By Nanthini on ஆவணி 7, 2026

Spread the love

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான பி.கே. சேகர்பாபு தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். அப்போது, மலைக்கோவில் அடிவாரத்தில் அவரது சொகுசு வாகனங்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதை அறிந்த திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் முன்னாள் அமைச்சர் மட்டுமின்றி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதால் அவரது வாகனத்தை மேலே அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், மலைக்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், அதற்கான சிறப்பு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்றும் கூறி காவல்துறையினர் வாகனத்தை மேலே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

   

தனது கண்முன்னே நடைபெற்ற இந்த வாக்குவாதத்தையும் தாமதத்தையும் கண்டு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தார். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த விவாதத்திற்குப் பிறகு, திருக்கோயில் உயர் அதிகாரிகள் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசிய பிறகே சேகர்பாபுவின் வாகனம் மலைக்கோவிலுக்குச் செல்ல காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டது. அதன்பின்னர், அவர் தனது குடும்பத்தினருடன் மேலே சென்று சாமி தரிசனம் செய்து திரும்பினார்.

   

கடந்த காலங்களில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தபோது அனைத்துத் திருக்கோயில்களிலும் வி.வி.ஐ.பி மரியாதையுடன் சாமி தரிசனம் செய்தவருக்கு, அதிகார மாற்றத்திற்குப் பிறகு தற்போது இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி இது தொடர்பான வீடியோக்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர்.