ரயில்வே கேட்டை மீறிச்சென்ற இளைஞர்… நொடி பொழுதில் வந்த ரயில்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்… திக் திக் வீடியோ…!

Spread the love

கிரேட்டர் நொய்டா தாதரி பகுதியில் நடந்த துயரமான ரயில் விபத்து ஒரு இளைஞரின் உயிரை காவு வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் மூன்று மணி அளவில் அப்பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ததாவலி கிராமத்தை சேர்ந்த துஷார் (19) என்பவர் ஓம் பிரகாஷின் மகன் ஆவார். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அவர் பைக் ஓட்டி வந்தபோது மூடப்பட்ட ரயில்வே கேட்டை மீறி உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. மண்பாதையில் பைக் வழுக்கி விழுந்ததால் அவர் தனது பைக்கை மீண்டும் தூக்க முயன்றார்.

ஆனால் அதே சமயம் வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. தப்பிக்க முயன்றும் முடியாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மூடப்பட்ட ரயில்வே கேட்டை மீறி யாரும் செல்ல வேண்டாம் எனவும் சிறிய அலட்சியம் கூட உயிருக்கு ஆபத்தாக முடியும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த துயரமான சம்பவம் ரயில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதின் அவசியத்தை மீண்டும் உணர்த்துகிறது.

 

Nanthini

Recent Posts

“விஜய்க்கு கம்யூனிஸ்ட் கட்சி போட்ட அதிரடி கண்டிஷன்”… தமிழக அமைச்சரவையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்… யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும்,…

2 minutes ago

விஜய் பதவியேற்று 10 நாட்கள்… இதிமுக கவுன்சிலர்கள் திடீர் ‘சைலண்ட் மோடு’… பின்னணியில் இருக்கும் ரகசியம்… கசிந்த அதிர்ச்சி தகவல்..!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்று பத்து நாட்களைக் கடந்த நிலையிலும், சென்னை மாநகராட்சி மேயர்…

6 minutes ago

“வீட்டுச் சாப்பாடு… 9 மணி என்ட்ரி”…கோட்டை வட்டாரத்தை அதிர வைக்கும் முதல்வர் விஜய்யின் ‘சைலண்ட்’ உத்தரவு…. தலைமைச் செயலகத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்…!

தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், அரசு நிர்வாகத்தில் அதிரடியான பல மாற்றங்களைச் செய்து…

10 minutes ago

“தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம்”.. முதல்வர் விஜய்க்கு 100 மார்க் போட்ட முன்னாள் IPS அதிகாரி ரவி…!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்களே ஆகியுள்ள நிலையில், அவர்தம் அதிரடியான மக்கள் நலத் திட்டங்களும் கார்ப்பரேட்…

15 minutes ago

இனி எந்த தப்பும் நடக்காது..! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி.. அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்,…

19 minutes ago

BREAKING: மாணவர்களே ரெடியா?… தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு… 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு..!

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9:30 மணிக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக…

21 minutes ago