மனைவியின் தங்கையுடன் கள்ளக்காதல்… அக்கா கணவரை பழிவாங்க வாலிபர் செய்த செயல்… சினிமாவையே மிஞ்சிய த்ரில்லிங் சம்பவம்..!

By Nanthini on புரட்டாதி 17, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் செய்த செயல் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு அமைந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டம் கமலுpiie கிராமத்தை சேர்ந்த கேசவ் குமார் (28) என்பவருக்கு திருமணம் ஆகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன. ஒரே ஊரில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த போது அவருக்கும் அவருடைய கொழுந்தியா கல்பனாவுக்கும் (19) இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததால் கடந்த மாதம் இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.

கேசவ் குமாரின் இந்த செயல் அவருடைய மைத்துணரான ரவீந்திரனுக்கு (22) பாத்திரத்தை ஏற்படுத்தியது. அக்காவின் கணவர் என்று நம்பி வீட்டுக்குள் விட்டதால் தன் தங்கையுடனே கள்ளத்தொடர்பு வைத்து குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டாரே என்று கோபத்திலிருந்து உள்ளார். இதனால் அவரை பழிவாங்க அவருடைய குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்று ரவீந்திரன் திட்டமிட்டு இருந்தார். இதனால் ஏற்கனவே கேசவ் குமாரின் 19 வயது தங்கையை காதலித்து வந்தார். அக்காவின் கணவரை பழிவாங்க அன்று மறுநாளே அவரது தங்கையை அழைத்துக் கொண்டு ரவீந்தரும் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

   

இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் போலீசில் புகார் அளித்த நிலையில் இரு ஜோடிகளையும் தேடி வந்த நிலையில் நான்கு பேரையும் போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்தனர். பிறகு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்களை இரு குடும்பத்தினரும் மன்னித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரு ஜோடிகளும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர். பிரச்சனை சுமூகமாக முடிந்தாலும் பாதிக்கப்பட்டது என்னவோ கேசவ் குமாரின் மனைவிதான். இந்த விவகாரம் சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு பரபரப்பாக அமைந்துள்ளது.