வேளாண் பட்டதாரிகளின் கவனத்திற்கு…! ரூ.6 லட்சம் மானியம் கிடைக்கும் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி….?

By Devi Ramu on புரட்டாதி 17, 2025

Spread the love

தமிழ்நாட்டில் வருடத்திற்கு 4000 வேளாண் பட்டதாரிகளும் 600 க்கும் மேற்பட்ட வேளாண் பட்டய படிப்பு முடித்தவர்களும் பட்டம் பெறுகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளின் நலன் மற்றும் விவசாயம் மேம்பாட்டிற்காக வேளாண் பட்டதாரிகளின் திறனை பயன்படுத்த முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் நிருவிட வேளாண் உழவர் நலத்துறை உதவி புரியும். இந்த மையம் நிறுவுவதற்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 3 முதல் 6 லட்சம் வரை மானியமாக கொடுக்கப்படும்.

இந்த மையம் மூலம் விதைகள், உரங்கள், பயிர் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, நவீன தொழில்நுட்பம் மற்றும் பிற வழிகாட்டுதல்களை வழங்கலாம். வேளாண் தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். 20 முதல் 45 வயது வரை இருக்கும் பட்டதாரிகள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

   

வேளாண் தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு, பட்டய படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலையில் இருக்க கூடாது. வங்கி மூலம் கடன் பெற்ற தொழில் புரிவோர் நிறுவனத்தின் உரிமையாளர் தனி உரிமை ஆக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கணினி திறனை பெற்றிருப்பது அவசியம். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் நிதி உதவி பெறலாம்.

   

உழவர் நல சேவை மையம் வைக்க விரும்பும் நபர்கள் விதை விற்பனை உரிமம் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்வதற்கான உரிமங்கள் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும். உரிமம் இல்லையென்றால் தேவையான உரிமம் பெறுவதற்கு வேளாண் துறை உதவி செய்யும். இந்த திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் 10 முதல் 20 லட்சத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கியில் கடன் உதவி பெறலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு வேளாண் துறை அலுவலகத்தை நாடலாம்.