உத்தர பிரதேச மாநிலம் பிராசாபாத் பகுதியில் நிதின் யாதவ் என்ற வாலிபர் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தன் காதலியை அங்கே உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வீரியத்தை அதிகரிக்கும் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட நிதின், காதலியின் விருப்பத்திற்கு மாறாக அவரிடம் அத்துமீற முயன்றுள்ளார். அதற்கு அந்த இளம் பெண் கடும் எதிர்ப்புத் தெரிவித்து மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நிதின், அந்தப் பெண்ணின் தலையைப் பலமாகச் சுவரில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நர்சிங் மாணவியான அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய குற்றவாளி நிதின் யாதவை உத்தர பிரதேசப் பொலிஸார் விரைந்து செயல்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். “எந்தவொரு உறவிலும் நபரின் சம்மதம் மிகவும் முக்கியமானது, விருப்பமில்லை என்று கூறும்போது அதை மதிப்பதே மனிதநேயம்” என இச்சம்பவம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்து வருகின்றன.
