நவி மும்பையின் உல்வே பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் , உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் தனது 23 வயது காதலியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கனடாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்த அப்பெண், தீபாவளிப் பண்டிகைக்காக உல்வேயில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். வியாழக்கிழமை அவர் மீண்டும் கனடா திரும்பவிருந்த நிலையில், அவரைச் சந்திப்பதற்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் உல்வே வந்து தங்கும் விடுதியில் அறை எடுத்திருந்தார். காதலனைச் சந்திக்க விடுதிக்குச் சென்ற அப்பெண் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பெண்ணின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவர் அந்தத் தங்கும் விடுதியில் இருப்பது தெரியவந்தது. விடுதி அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, அப்பெண் உயிரிழந்த நிலையிலும், அந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டனர். முதலில் விபத்து மரணமாகப் பதிவு செய்த உல்வே காவல்துறையினர், பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் தற்போது கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு மூத்த டாக்டர்…
ஹைதராபாத் கே.பி.எச்.பி பகுதியில் தங்கள் குழந்தையைக் கொன்றுவிட்டுப் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்குள் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களும் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்…
அகமதாபாத் கோமதிபூர் பகுதியில் நவம்பர் 10-ஆம் தேதி இரவு சிறுவர்களுக்கு இடையிலான சண்டையைத் தடுக்க முயன்ற ஒருவர் மீது கொடூரமான…
அசாம் மாநிலம் கவுகாத்தியில், அருணாப் கலிதா என்ற 12-ஆம் வகுப்பு மாணவர் தனது தாயார் சந்திராணி கலிதாவை கத்தியால் குத்திவிட்டு,…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தின் போது மணமகன் ஒருவர் ரதத்தில் அமர்ந்தபடி மகிழ்ச்சியுடன் துப்பாக்கியால் வானத்தை…