“விஜய் அண்ணா என்னை எப்படியாவது காப்பாத்துங்க…” மலேசியாவில் நரக வேதனை அனுபவிக்கும் வாலிபர்…. கண்ணீர் மல்க பேசிய வீடியோ வைரல்…!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2026

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் வேலை தேடி மலேசியாவிற்குச் சென்று 3 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், அங்கு தான் வேலை செய்யும் இடத்தில் முதலாளி தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், சம்பளம் தராமல் சித்திரவதை செய்வதாகவும் கூறி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “விஜய் அண்ணா வணக்கம், நான் மலேசியாவிற்கு வந்து மாட்டிக்கிட்டேன். இங்க இருக்குற முதலாளி தினமும் அடிச்சு, சம்பளமும் தராம சித்திரவதை பண்றாங்க. நீங்கதான் பார்த்து என்னை எப்படியாவது காப்பாத்தணும்” என முதலமைச்சர் விஜய்யிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

   

https://www.instagram.com/reel/Ddd5QadgN6V/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==

   

சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமலும், முதலாளியின் கொடுமைகளைத் தாங்க முடியாமலும் மலேசியாவில் தவிக்கும் அருணின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்து, அவரை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.