ஹைதராபாத் ஹஃபிஸ்பேட்டை ரயில் நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஆதித்ய நகரில், ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் பெண் ஒருவரை லத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதோடு நிறுத்தாமல், அப்பெண்ணின் தலைமுடியைப் பிடித்து தரதரவென ரயில் நிலையத்தை நோக்கி இழுத்துச் சென்றுள்ளார். மனிதநேயமற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் செயலின் முழு வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையேயும் இணையவாசிகளிடையேயும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சட்டத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய காவலரே இவ்வாறு நடந்துகொண்டது ரயில்வே பாதுகாப்புப் படைத் துறைக்கே பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/asifjafri78/status/2101151279888089109/video/1
இச்சம்பவத்திற்குக் கடுமையான கண்டனங்கள் குவித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஆர்பிஎஃப் காவலர் மீது உடனடியாகவும் மிகக் கடுமையான முறையிலும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
