“கண்திருஷ்டி கழிக்கிறேன்…” கணவர் இல்லாத நேரம்…! திருநங்கை போல வந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்…. திடுக்கிடும் அதிர்ச்சி பின்னணி…!!

By Devi Ramu on ஆவணி 21, 2026

Spread the love

மும்பை போவாய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 25 வயது விமானப் பணிப்பெண் ஒருவரின் வீட்டிற்குள், ‘கண் திருஷ்டி’ கழிப்பதாகக் கூறி திருநங்கை போல வீட்டுக்குள் நுழைந்த ஒருவர், அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில், வீட்டில் பெண் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அனில் ஷிண்டே (28) என்ற நபர் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிப் பாலியல் துன்புறுத்தல் செய்த பிறகு, அவரிடமிருந்து 200 ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு அனில் ஷிண்டே தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போவாய் காவல் துறையினர் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கல்வா குடிசைப் பகுதியில் ஒளிந்திருந்த அனில் ஷிண்டேவை 4 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான நபர் மீது பாலியல் வன்கொடுமை, குற்றவியல் மிரட்டல் மற்றும் மாந்திரீகத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.