மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சம்பாஜிநகரில் கடந்த வியாழக்கிழமையன்று தேவேஷ் என்ற பண்டி தீட்சித் என்பவர் காரால் ஸ்கூட்டர் மீது மோதப்பட்டு, ஹாக்கி மட்டை மற்றும் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிட்கோ பகுதியில் ஜிம்மில் இருந்து திரும்பும்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பவன் பராசார் என்பவர் தனது காரால் தீட்சித்தின் ஸ்கூட்டர் மீது பின்னால் மோதியுள்ளார். கீழே விழுந்த அவரை பராசார் இரும்பு கம்பி மற்றும் ஹாக்கி மட்டையால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலுக்குப் பிறகு பராசார் சிட்கோ காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
https://twitter.com/HateDetectors/status/2113579431839367449/video/1
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீட்சித்திற்கும் பராசருக்கும் இடையே முன்பகை அல்லது வணிக ரீதியான தகராறு இருந்திருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
