கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், இசை வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தாய் மற்றும் அவரது 3 மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகள் மீது, மதுபோதையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சாலையோரமாக நடந்து சென்றவர்கள் மீது கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த தாய் மற்றும் இரண்டு சிறுவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலையிலும், கைகால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
https://twitter.com/AbhishekJalan26/status/2113518283941200054/video/1
போதையில் வாகனம் ஓட்டுவது இதுபோன்ற பலரது இன்னுயிரை பறிக்கும் பெரும் குற்றமாகும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விபத்துகளைத் தவிர்க்க சாலைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
