ரத்தத்தை உறிஞ்சி சித்ரவதை…! EMI கட்டாத வாலிபரை 5 நாட்கள் சிறைப்பிடித்து கொடுமை… புகார் கொடுக்க சென்ற போது விரட்டிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 15, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் நிகோஹா பகுதியில் உள்ள ராஜாராம் கேடா புரஹியா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தான் வாங்கிய கடனுக்கான இஎம்ஐ தவணைத் தொகையைச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி நிதி நிறுவனத்தின் வசூல் முகவர் ஒருவர், அந்த வாலிபரை கடத்திச் சென்று சுமார் 5 நாட்கள் சட்டவிரோதமாகச் சிறைப்பிடித்து வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரை அடிமைபோல் வேலை செய்ய வைத்து இரக்கமின்றி கொடூரமாகத் தாக்கியதுடன், ரத்த வங்கிக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக ரத்தத்தையும் உறிஞ்சியதாகத் திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பாதிக்கப்பட்ட வாலிபர் தப்பித்து காவல் சாவடிக்குச் சென்று புகாரளித்தபோது, அங்கிருந்த போலிஸார் அவரை விரட்டியடித்ததாகவும், காவல் நிலையத்திற்குச் சென்ற குடும்பத்தினரையும் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தெற்கு மண்டல டிசிபி, கடத்தல் உள்ளிட்ட தீவிரப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், அலட்சியமாகச் செயல்பட்ட போலிஸார் மீது விசாரணைக்கும், தலைமறைவாக உள்ள வசூல் முகவரைக் கைது செய்யவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.