குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் பத்ராவில் உள்ள ஜோஷ்பூர் சாலையில் பெய்த கனமழை காரணமாகப் பெருக்கெடுத்த வெள்ள நீரில் மொத்தச் சாலையும் மூழ்கியது. அப்போது அவ்வழியாக நடந்து வந்த தாயும் மகளும், வெள்ள நீர் தேங்கியிருந்ததால் சாலையில் தோண்டப்பட்டிருந்த பெரிய பள்ளத்தைக் கவனிக்க முடியாமல் திடீரென அதனுள் தவறி விழுந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் தண்ணீரால் நிரம்பிய பள்ளத்திற்குள் விழுந்ததால்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தைக் கண்ட உடனே அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் சற்றும் தாமதிக்காமல் ஓடிவந்து, விரைந்து செயல்பட்டுத் தாயையும் மகளையும் பத்திரமாகப் பள்ளத்தில் இருந்து வெளியே மீட்டனர். மழைநீரால் மறைந்திருந்த பள்ளத்தால் நேர்ந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
