லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

By Devi Ramu on ஆடி 23, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத் வழுக்கிப் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். நல்வாய்ப்பாகப் பள்ளத்தில் இருந்த மரத்தின் கிளையில் அவர் மாட்டிக்கொண்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் இணைந்து, மரத்தில் தவித்த இளைஞரைப் பத்திரமாக மீட்டுள்ளனர். இது தொடர்பான பரபரப்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மழைக்காலத்தில் மலைப்பாதைகளில் நிலவும் ஆபத்துகளை உணராமல் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க லோனாவாலா சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவிகள், கோட்டைகள் மற்றும் செங்குத்தான மலை உச்சிப் பகுதிகளுக்குத் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.